A+ A-

மும்பை வந்தது ஸ்ரீதேவியின் உடல்.... நாளை மாலை இறுதிச்சடங்கு!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் துபாயிலிருந்து மும்பைக்கு தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. நாளை மாலை 3.30 நல்லடக்கம் செய்யப்படுகிறது.

துபாயில் கடந்த வாரம் உறவினர் திருமணத்திற்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி சனிக்கிழமையன்று குளியலறையில் பாத் டப்பில் மூச்சுத்திணறி இறந்துள்ளதாக உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்ககப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பல சந்தேகங்கள் எழும்பியதால் அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டு வர தாமதம் ஏற்பட்டது. தற்போது விசாரணைக்குப் பின்னர் அவரது உடலை குடும்பத்தினருக்கு ஒப்படைக்க துபாய் பொலிஸார் அனுமதிக்கடிதம் அளித்ததையடுத்து, பின்பு எம்பாமிங் செய்து தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது மும்பை விமானநிலையத்திலிருந்து அந்தேரியில் உள்ள அவரது இலலத்திற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்து அதன்பின்பு 3.30 மணியளவில் நல்லடக்கம் செய்யவுள்ளனர்.