A+ A-

எமி ஜாக்ஸன் காதலன் யார்? டேட்டிங் விளையாட்டால் அம்பலம்

மதராஸ பட்டணம் தொடங்கி ஐ, தங்கமகன், கெத்து, தெறி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் எமி ஜாக்ஸன். தற்போது ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்திருக்கிறார். லண்டனை சேர்ந்த எமி ஆங்கில சீரியல் ஒன்றிலும் நடிப்பதால் அடிக்கடி இங்கிலாந்து, இந்தியா என நாடுவிட்டு நாடு பறந்துகொண்டிருக்கிறார். அதேசமயம் நெருங்கிய நண்பர்கள், தோழிகளுடன் நைட் பார்ட்டியிலும் கலந்துகொள்கிறார். சமீபத்தில் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட எமியுடன் அவரது ரகசிய காதலனும் கலந்துகொண்டார்.

அவரது இடுப்பில் ஏறி அமர்ந்து காதல் சிலுமிசம் செய்த போட்டோவை இணைய தளத்தில் வெளியிட்டார் எமி. ஆனால் காதலன் முகம் வெளியில் தெரியாத அளவுக்கு பார்த்துக்கொண்டார். எமியின் காதலன் யார்? என்று பலரும் கேட்டு வந்த நிலையில் தற்போது அந்த ரகசியத்தை எமியே உடைத்திருக்கி றார். அவரது பெயர் ஜார்ஜ் பனயோடவ். இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர். ரியல் எஸ்டேட் மற்றும் கிளப் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

காதலர் தினத்தை இருவரும் கொண்டாடாமல் ரகசியமாக டேட்டிங் செய்தனர். கனடா நாட்டுக்கு சென்ற இருவரும் கடற்கரை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து 3 நாள் தங்கி ஜாலியாக பொழுதை கழித்தனர். காதலனுடன் டேட்டிங் சென்ற படங்களை எமி ஜாக்ஸன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஏற்கனவே எமி ஜாக்ஸன் இந்தி நடிகர் பிரதிக் பாபருடன் காதல் வயப்பட்டிருந்தார். பின்னர் இருவரும் காதலை பிரேக் அப் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.