A+ A-

7 லட்சம் லைக்குகளை பெற்ற கத்ரினா கைபின் போட்டோ !

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நம் கத்ரினா கைப் . இவரின் தந்தை ஒரு காஷ்மீர்க்காரர், அவரது தாயார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். கேட்ரீனா இளம் வயதாக இருந்த போதே பெற்றோர் விவாகரத்து பெற்று தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். ஹாங்காங்கில் வளர்ந்த கய்ஃப் பின்னர் அவரது அம்மாவின் தாய்நாடான இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தார்.கேட்ரீனாவுடன் பிறந்தவர்கள் ஏழுபேர்.


A post shared by Katrina Kaif (@katrinakaif) on


தனது பதினான்காம் வயதில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்ததன் மூலம் விளம்பர உலகத்தில் தனது முதல் பயணத்தை தொடங்கினார். கேட்ரீனாவின் மாடலிங் பணியைப் பார்த்து ரசித்த இலண்டனைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கெய்ஸாத் கஸ்டாட், அவரைத் திரைப்பட நட்சத்திரமாகக் கண்டெடுத்து தனது திரைப்படமான பூம் (2003) படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். இதன் பிறகு மும்பைக்கு இடம் பெயர்ந்த கேட்ரீனாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன.

மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் கத்ரீனா எப்பொழுதும் போட்டோக்களை மிக அழகாக போஸ் கொடுக்கும் திறன் உடையவர். இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோ 7 லட்சங்களுக்கு மேல் லைக் பெற்றுள்ளது.