A+ A-

சீனாவில் பிரம்மாண்டமாக ஐமேக்ஸில் பாகுபலி 2

இந்தியாவிலேயே அதிகமான பட்ஜெட்டில் தயாரான படம் ராஜமவுலியின் பாகுபலி. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பாகுபலி, பாகுபலி-2 படங்கள் வசூல் சாதனை புரிந்தன. அதிலும் பாகுபலி-2 இப்போதுவரை சில வெளிநாடுகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மே மாதம் 4-ந்தேதி சீனாவில் வெளியாக உள்ளது பாகுபலி-2. குறிப்பாக சீனாவில் இதற்கு முன்பு வெளியான இந்திய படங்களை விடவும் அதிகப்படியான தியேட்டர்களில் பாகுபலி-2 வெளியாகிறது. அதிலும் ஐமேக்ஸ் வடிவத்தில் இப்படம் சீனாவில் வெளியாகிறது.

அந்த வகையில், ஐமேக்ஸ் வடிவில் சீனாவில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமை பாகுபலி-2விற்கு கிடைத்துள்ளது.