A+ A-

விஜய் 62 படத்தில் இணைந்த பிரபல நடிகர்.!

தளபதி விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார், படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், மேலும் நடிகை வரலக்ஷ்மி மிக முக்கியமான கேரக்ட்டரில் நடித்து வருகிறார்.

படத்தை பிரமாண்ட பொருட் செலவில் சன் பிக்சர் நிறுவனம் தயாரித்து வருகிறது, படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார் இவர் இதற்க்கு முன் மெர்சல் படத்திக்கும் இசையமைத்தார் என்பது அனைவர்க்கும் தெரியும்.
படபிடிப்பு இதுவரை 40 சதவீதம் முடிந்துள்ளது ஸ்ட்ரைக்கால் படம் நிறுத்தபட்டது தற்பொழுது ஸ்ட்ரைக் முடிந்ததால் மீண்டும் விரைவில் படபிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்கபடுகிறது, மேலும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது.
படத்தில் பிரபல நடிகரான லிவிங்ஸ்டன் நடிக்க இருக்கிறாராம் இதை இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மகிழ்ச்சியாக கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.