A+ A-

7.1 மில்லியன் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த காஜல்..!

நடிகை காஜல் அகர்வால் டுவிட்டர், இன்ஸ்டிராகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார். படம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், தனது போட்டோ, வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளார்.

இதில் இன்ஸ்டிராகிராமில் காஜல் அகர்வாலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7.1 மில்லியன் ஆகியிருக்கிறது. இதையடுத்து அந்த 7.1 மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.