A+ A-

அம்மணமாக நடிக்கக் கூட கணவர் சுதந்திரம்.!

மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த் 2 படங்களில் நடித்த நடிகை சுர்வீன் சாவ்லா. சில ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2015-ம் ஆண்டே அக்ஷ்ய் தக்கர் என்ற தனது நீண்டகால காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். கடந்தாண்டு டிசம்பரில் அவர் திருமணம் செய்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது,

இதனிடையே சுர்வீன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் திருமணத்திற்கு பிறகு எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் நடிக்கும்போது சக நடிகருக்கு முத்தம் கொடுத்தாலோ அல்லது நிர்வாணமாக நடித்தால் கூட என் கணவர் எதுவும் சொல்லமாட்டார். கதைக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றபடி நடிப்பேன். அந்தளவுக்கு எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். என்னைப் பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.