A+ A-

பிரபல நடிகரை அசத்திய சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி செந்தில்!

தற்போதெல்லாம் டி.வி நிகழ்ச்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் பாட்டு நிகழ்ச்சி என்றால் சொல்லவே வேண்டாம். குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தற்போது உச்சத்தில் இருப்பவர்கள் செந்தில்- ராஜலட்சுமி. கிராமிய இசையாலும், தனித்த குரல்வளத்தாலும் பலரையும் கவர்ந்தவர்கள் இந்த ஜோடி.


இந்நிகழ்ச்சியில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுவருகிறார். அதில் மேடைக்கு வந்த சிவா நிகழ்ச்சி தொகுப்பாளர் போல பேசி மேடைக்கு ராஜலட்சுமியை அழைத்தார்.


வீரத்தமிழச்சி என சிவா சொன்னதால் பிரம்மிப்பில் ஆழ்ந்துவிட்டார் ராஜி. பின் மேடைக்கு வந்த செந்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடலை பாட உடனே சிவகார்த்திகேயன் மேடைக்கே சென்று வாழ்த்தினார். இதன் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.