A+ A-

வித்தியாசமான வேடங்களில் விக்ரம் - அக்சராஹாசன்..!

உதவி இயக்குநராக பணியாற்றி வந்த அக்சராஹாசன், ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் இணைந்து தனுஷ் நடித்த ஷமிதாப் படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தமிழில் அஜித் நடித்த விவேகம் படத்தில் நடாஷா என்றொரு வித்தியாசமான கேரக்டரில் நடித்தார்.

அதன்பிறகு கமலின் சபாஷ் நாயுடு படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அக்சராஹாசன், தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் விக்ரமை வைத்து தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திலும் விவேகம் படத்தைப்போன்று ஒரு வித்தியாசமான கேரக்டரில் தான் நடிக்கிறாராம் அக்சரா. ராஜேஷ் செல்வா இயக்கும் இந்த படத்தில் விக்ரம் -அக்சராஹாசனின் வேடங்கள் எதிரும் புதிருமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது.