A+ A-

பறக்கும் : பாரிஸ் பாரிஸ் குழு..!

ஹிந்தியில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற 'குயின்' படத்தின் ரீமேக் படம் தென்னிந்திய மொழிகளில் தயாராகி வருகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல் யாதவ், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஆகியோர் ஹிந்தியில் கங்கனா ரனவத் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

தெலுங்கு, மலையாளப் படங்களை இயக்கிய நீலகண்டா வெளிநாடு படப்பிடிப்பு முடிந்த்தும், தமன்னாவுடன் ஏற்பட்ட தகராறில் தெலுங்குப் படத்திலிருந்து வெளியேறிவிட்டார். பின்னர் தெலுங்குப் படத்தையும், தமிழ், கன்னடப் படங்களை இயக்கி வந்த ரமேஷ் அரவிந்த் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு மைசூரில் நடைபெற்றது. அடுத்து மீண்டும் வெளிநாடு செல்ல உள்ளார்களாம். இதற்காக தற்போது அங்கு படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்ய போய் உள்ளார்கள்.

முதல் கட்டப் படப்பிடிப்பு பிரான்ஸ் நாட்டில் கடந்த வருடம் நடைபெற்ற நிலையில் மீண்டும் வெளிநாடு செல்லப் போகிறார்கள். இந்த வருடக் கடைசியில் ஒரே நாளில் நான்கு மொழிகளிலும் படம் வெளியாக உள்ளது.