A+ A-

தேசிய தலைவர் பிரபாகரனை சந்தித்த தருணம்- எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் சுசானா

ஆர்யாவுக்காக வாழ்க்கை துணை தேடும் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் அவர் ஐந்து பெண்களை தேர்வு செய்து வைத்துள்ளார். அதில் யாரை அவர் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்பது தெரியவில்லை.

ஒவ்வொரு பெண்களின் வீட்டிற்கு சென்ற ஆர்யா சமீபத்தில் சுசானாவின் இலங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரின் உறவினர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்தார். அப்போது அவர்களிடம் நீங்கள் பிரபாகரன் அவர்களை பார்த்தது உண்டா என கேட்க அவர் நான் சந்தித்துள்ளேன் என்று கூறினார்.

மேலும் அவர், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்களது வீட்டில் தான் கராத்தே கற்றுக்கொண்டார். 1983ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் சுற்றிவளைத்த போதும் பிரபாகரன் உட்பட மூன்று பேர் இந்த வீட்டில் மறைந்திருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.