A+ A-

மீண்டும் வருகிறார் வினித்..!

தமிழில் ஆவாரம்பூ படத்தின் மூலம் அறிமுகமானவர் வினித். பழம்பெரும் நடிகை பத்மினியின் உறவினரான இவர் பரதநாட்டிய கலைஞர் கூட. ஜாதிமல்லி, ஜெண்டில்மேன், வேதம், மே மாதம், காதல் தேசம், சந்திரமுகி, உளியின் ஓசை உள்பட பல படங்களில் நடித்தார். மலையாளத்தில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி நடன நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த வினித், தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கும் சர்வம் தாள மயம் என்ற படத்தில் நடித்து வருகிறார் வினித். இதில் ஜி.வி.பிரகாஷ் பாடகராகவும், வினித் நடன கலைஞராகவும் நடிக்கிறார்கள். மீண்டும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.