A+ A-

தமிழர் தமிழால் இணைவோம்: கமல்..!


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உலக தமிழ் மக்களுக்கு புத்தாண்ட வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து டுவிட்டர் அவர் தெரிவித்ததாவது: 'உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில், அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழிநடப்போம் என உறுதி ஏற்போம். மத்திய, மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனத்தை பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என முழங்குவோம். தமிழர் தமிழால் இணைவோம். நாளை நமதே!'. இவ்வாறு அவர் தெரிவித்தார்.