A+ A-

ட்விட்டர் மூலம் ஜெய் அஞ்சலி காதல்..!

 நடிகர் ஜெய்க்கு ஓப்பனிங் என்றால் விஜய் நடித்த பகவதி என்று தான் சொல்லவேண்டும். பின் அவருக்கு சுப்பிரமணியபுரம், சென்னை 28, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்கள் சிறப்பை கொடுத்தது.

அவருக்கு அண்மையில் வந்த பலூன், கலகலப்பு ஆகியபடங்கள் பெரிதும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு நீண்ட நாளாக நடிகை அஞ்சலியுடன் காதல் என சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் நடிகை அஞ்சலி இப்போதைக்கு திருமணம் இல்லை என்று மட்டுமே சொல்லிவந்தார். அவரும் தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் நடிகர் ஜெய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் சொல்லியிருக்கிறார். அண்மையில் ஜெய் தன் 34வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளாராம்