A+ A-

ரஜினி படத்தின் இசை கேள்விக்குறி...?

இசையமைப்பாளர் அனிருத் படங்களுக்கு இசையமைப்பதுடன் வெளிநாடுகளில் நேரடி இசை நிகழ்ச்சி நடத்துவதிலும் ஆர்வமாக உள்ளார்.

தனுஷ் நடித்த தங்கமகன் படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது, படத்துக்கான பாடல்களைத் தராமல் கனடா இசை நிகழ்ச்சிக்கு சென்றார். இதனால் அப்போதே தனுஷ் - அனிருத் இடையே சிறு உரசல் ஏற்பட்டது.

அதன் பிறகு வேலைக்காரன் படத்துக்கு இசையமைத்த போதும் வெளிநாட்டு இசைநிகழ்ச்சிக்காக மெனக்கெட ஆரம்பித்தார். அதனால் கருத்தவன் எல்லாம் கலீஜா பாடலை குறித்த நேரத்தில் கொடுக்காமல் போனதால் படப்பிடிப்பே கேன்சலானது.

இந்நிலையில் ஜூன் மாதம் 16 மற்றும் 17ஆம் தேதிகளில், லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் அனிருத். தற்போது இதற்கான இசைப்பணிகளை தொடங்கிவிட்டார் அனிருத். இதனால் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் இசையும் தாமதமாகும் சூழல் ஏற்படலாம் என தெரிகிறது.

ஆனாலும் ரஜினி உடனான முதல் படம் என்பதால் அனிருத் நிச்சயம் அதற்கு ஏற்றபடி அதிக மெனகெடுவார். ஆகையால் படத்தை பாதிக்காதபடி இசை பணிகளை முடித்து கொடுப்பார் என தெரிகிறது.