A+ A-

சொந்தக்குரலில் பேசும் சமந்தா..!

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியிருக்கும் படம் மகாநதி. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடிக்க, துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக நடித்துள்ளார். சமந்தா, நிருபர் வேடத்தில் நடித்திருக்கிறார்.

மே மாதம் 9-ந்தேதி வெளியாகும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருகிறது. துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிக்கும் டப்பிங் பேசிவிட்டார். அவரைத் தொடர்ந்து அடுத்த வாரம் சமந்தா டப்பிங் பேசுகிறார்.

இதுவரை சமந்தா நடித்த படங்களுக்கு சின்மயி டப்பிங் பேசி வந்துள்ள நிலையில், இந்த படத்திற்கு முதன்முறையாக இரண்டு மொழிகளிலும் சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார் சமந்தா.