A+ A-

விவசாயமா அல்லது ஐபில் விளையாட்டா ? வைரலாகுது சமுத்திரக்கனி வரைந்த கார்ட்டூன் !

முத்திரக்கனி சினிமாவில் நல்ல நடிகர் மற்றும் இயக்குனர் என்பதைவிட நல்ல மனிதர் என்று பெயரெடுத்தவர். நேர்பட பேசுபவர். 

பிரதிபலனை எதிர்பார்க்காமல் தன்னால் முடிந்த வரை அடுத்தவருக்கு உதவிகளை செய்து வருபவர். இவர் இயக்கும் படங்களிலும் தற்பொழுதைய சூழ்நிலை,சுய முன்னேற்றத்துக்கு தேவையான கருத்துக்களை தன் படத்தில் புகுத்துபவர். 

தமிழகத்தின் பாரம்பர்யம், மற்றும் கலாச்சாரம் குறித்து வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம், பெருமையாக அதை பறைசாற்றுபவர்.


 இந்நிலையில் இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் “விவசாயம் மீட்டெடுப்போம் !” என்ற தலைப்பில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு புறம் மஞ்சள் உடையில் சி எஸ் கே ஐபில் வீரர் மறுபுறம் நம் விவசாயி. இவர்களில் தமிழ்நாட்டுக்கு தற்பொழுது உள்ள சூழலில் யார் அவசியம் ? என்ற கேள்வியை நம் முன் வைத்துள்ளார். தமிழகத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றுமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.