A+ A-

ரசிகர்களிடம் மன்னிப்பும், வேண்டுகோளும் வைத்த கார்த்திக் சுப்புராஜ் !

குறும்படங்கள் மூலம் அறிமுகமாகி பிறகு பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
இவர் கமல் நடித்த பேசும் படம் பாணியில் கதாபாத்திரங்கள் யாருமே பேசாத ஊமைப் படமாக, சுமார் 30 வருடம் கழித்து “மெர்குரி” படத்தை தன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மூலம் தயாரித்து இயக்கி உள்ளார்.

பிரபு தேவா, சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இது ஊமைப் படம், குறிப்பிட்ட மொழி என கிடையாது, எனவே உலகம் முழுவதும் இப்படம் அறிவித்தது போல ஏப்ரல் 13 ரிலீஸாகும் என்று கூறினார் இயக்குனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கார்த்திக் சுப்புராஜ் தமிழ் வெர்ஷன் ரிலீசாகாது என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தன் ட்விட்டரில் கருது ஒன்றை பதிவிட்டுள்ளார்.

“இன்று ‘மெர்க்குரி’ என் வீடான தமிழ்நாடு மட்டும் அல்லாமல் உலகெங்கும் 1000 திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. எனது படத்துக்கு இவ்வளவு பெரிய ரிலீஸ் மற்றும் நல்ல வரவேற்பும் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது . இந்தப் படத்தை என்னை ஆளாக்கிய தமிழக மக்களுக்குக் காட்ட இயலாத சூழ்நிலையை நினைத்து மனம் வருந்துகிறேன்.

உலகளாவிய ரிலீஸ் தேதியையும் தள்ளி வைத்தால் வர்த்தகம் பாதிக்கும் என்ற நிலை. மேலும் படத்தின் இந்தி வெர்ஷனையும் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. சீரான நிலைக்குத் திரும்பும் என நம்பிக்கையுடன் முழு மூச்சாகப் பங்கு கொண்டிருக்கும் ஃபெப்ஸி தொழிலாளர்களுக்கு நாங்களும் எங்களது ஆதரவை தருகிறோம்.

இதனால் தான் என் தமிழ் ரசிகர்களுக்கு இந்த ‘மெர்குரி’ படத்தைக் காண்பிக்க இயலவில்லை. மிகுந்த வலியுடனும், வேதனையுடனும் தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படத்தைக் காட்ட நானும் எனது டீமும் காத்துக் கொண்டிருக்கிறோம். தயவு செய்து திரையரங்கில் ரிலீசாகும் வரை காத்திருங்கள், தயவு செய்து இணையத்தில் பார்ப்பதை தவிர்க்கவும்.


என ஆழ்மனதில் இருந்து மன்னிப்பையும், இந்த வேண்டுகோளையும் தமிழக சினிமா ரசிகர்கள் முன் வைக்கிறேன்.” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.