A+ A-

நான்கு நடிகைகளுடன் கலக்கப்போகும் - விஜய் ஆண்டனி


விஜய் ஆண்டனியின் காட்டில் அடைமழை பொழிகிறது. இவர் நடித்த பிச்சைக்காரன் படம், தெலுங்கிலும்,'டப்' செய்யப்பட்டு, வசூலை குவித்ததால், அங்கும் அவரது படங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தற்போது அவர் நடித்து வரும், காளி படமும், தெலுங்கில், காசி என்ற பெயரில், 'டப்' செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில், விஜய் ஆண்டனிக்கு, அஞ்சலி, சுனைனா, ஷில்பா, அம்ரிதா என, நான்கு ஜோடிகளாம். இதைக்கேள்விப்பட்டு, சக நடிகர்கள் பொறாமை அடைந்தாலும், ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
நான்கு ஹீரோயின்கள் என்றாலும், சீனியரான அஞ்சலிக்கு தான், வெயிட்டான கேரக்டராம். தமிழில், மீண்டும் முதல்வரிசைக்கு வரும் ஆர்வத்துடன் உள்ள அஞ்சலி, காளி படத்தை ரொம்பவே எதிர்பார்த்துள்ளார்.