A+ A-

பெண்களை ஏமாற்றிய ஆர்யா மீது வழக்கு?

நடிகர் ஆர்யா தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் இறுதியில் அவர் எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காமல், எனக்கு மேலும் நேரம் வேண்டும் என கூறிவிட்டார்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா தற்போது அளித்துள்ள பேட்டியில் "ஆர்யா ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என அக்ரீமென்ட் போட்டுள்ளார். இறுதியில் ஆர்யா அப்படி ஒரு முடிவை அறிவித்த பிறகு, அந்த தொலைக்காட்சி நினைத்திருந்தால் ஆர்யா மீது வழக்கு தொடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. ஆர்யாவின் வாழ்க்கையை கெடுக்க அவர்கள் விரும்பவில்லை" என கூறியுள்ளார்.