A+ A-

ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரீலுக்கு நிச்சயதார்த்தம்..! விரைவில் டும் டும் டும்!

‘கொலவெறி டி’ பாடலிற்கு பிறகு யூ டியூபில் மறுபடி ஒரு பாடல் ஹிட் அடித்தது என்றால், அது மோகன்லால் நடிப்பில் லால் ஜோஸ் இயக்கத்தில் வெளியான ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ என்ற படத்தின் “என்ட அம்மே ஜிமிக்கி கம்மல்” என்ற பாடல் தான் .
படத்தின் ப்ரோமஷனுக்காக , ஹாஷ்டாக் இட்டு உங்களின் டான்ஸ் விடியோவை அப்லோட் செய்யுங்கள் என்று தயாரிப்பாளர் டான்ஸ் சாலேஞ் விட்டதன் விளைவு பல விடியோக்கள் வெளியாகின.
அதிலும் இந்தியன் ஸ்கூல் ஆப் காமெர்ஸ் பெண்களின் டான்ஸ் வீடியோ பல மில்லியன் பார்வைகளை தாண்டி, ஒரிஜினல் வெர்ஷனை விட ரீச் அதிகமானது. குறிப்பாக ஷெரில் என்ற டீச்சரின் நடனம் பலரின் கவனத்தை ஈர்த்தது. அன்று தொடங்கி இன்றுவரை , இவருக்கு தமிழ், மலையாளம் என சினிமா வாய்ப்புகள் வீடு தேடி சென்றவண்ணம் உள்ளது. ஆனால் இவர் பெரிதாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடலின் டீசரில் ஷெரில் வந்தார். மேலும் சில பாடல் ஆல்பங்கள் மட்டும் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் கேரளாவின் தொடுப்புழா அருகே உள்ள வாழக்குளம் என்ற ஊரில் நேற்று ஷெரிலுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பிரஃபுல் டாமி என்பவரை தான் ஷெரில் திருமணம் செய்யப்போகிறார். நிச்சயதார்த்தத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். விரைவில் திருமண தேதிவெளியாகும் .

சினிமாபேட்டை கிசு கிசு

சினிமா வாய்ப்பு வந்து கொண்டே இருப்பதால், மனம் மாறி சினிமாவுக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக திருமணம் ஏற்பாடு செய்துவிட்டார்களோ இவரின் பெற்றோர் என்று நினைக்கத்தோன்றுகிறது.