A+ A-

சூர்யா, விஜய் இருவரையும் ஓரம் கட்டிவிட்டு முதலிடத்தை பிடித்த பிரபலம்.!

விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர், இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் ஏராளம் இவரின் படம் திரைக்கு வருகிறது என்றால் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள் அட்லி இயக்கிய தெறி மற்றும் மெர்சல் மாஸ் ஹிட் ஆனது மெர்சல் திரைப்படம் பல சாதனைகளை கடந்தது.

அதேபோல் இணையதளத்திலும் பல சாதனைகள் படைத்துள்ளது  சமீபத்தில் கூட மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடல்  youtube -ல் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் தான் இந்தியாவிலேயே அதிக ரீ ட்விட் செய்ததாக இருந்தது 68 ஆயிரம் ரீட்விட் ஆகி முதல் இடத்தில் இருந்தது, ஆனால் அது நிலைக்கவில்லை சூர்யா நடித்து கடந்த பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தின் செகண்ட் லுக் 73 ஆயிரம் ரீ-ட்விட் ஆகி மெர்சல்லை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் சூர்யா.

தற்பொழுது இவர்கள் இரண்டு பேரின் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார் விராத், காரணம் விராத் அனுஷ்கா திருமாண செய்திதான் இந்தியாவிலேயே 81 ஆயிரம் ரீ ட்விட் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளார்கள் விராத் மற்றும் அனுஷ்கா.