A+ A-

தமன்னாவுக்கு கிடைத்த கௌரவம்!

மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார், தமன்னா. மும்பையில் நடந்த, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளின் துவக்க விழாவில், நடனமாட, தனக்கு கிடைத்த வாய்ப்பை, பெரும் கவுரவமாக கருதுகிறார். இந்த மகிழ்ச்சியை இன்னும் அவரால் மறக்க முடியவில்லையாம்; அதற்குள், மற்றொரு மகிழ்ச்சியான நிகழ்வு, அவருக்கு அரங்கேறியுள்ளது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிப்பில், 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகும், நரசிம்ம ரெட்டி படத்தில், முக்கியமான வேடத்தில், தமன்னா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில், அமிதாப், ஜெகபதி பாபு, சுதீப் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி நடிக்கும் முதல் தெலுங்கு படம் இது. இந்த படம், தெலுங்கில் மட்டுமல்லாது, ஹிந்தி, தமிழ் மொழிகளிலும் தயாராகிறதாம்.