A+ A-

காது கேட்காத கேரக்டர் இருக்கா?


ரெஜினாவுக்கு, தமிழில் அதிக படங்கள் ஒப்பந்தமானாலும், அவர், தெலுங்கு படங்களில் நடிப்பதில் தான், ஆர்வம் காட்டுகிறார்.

தெலுங்கில், ராம்சரண் நடித்து, சமீபத்தில் வெளியாகி, 'ஹிட்' அடித்துள்ள ரங்கஸ்தலம் படத்தை பற்றித் தான் அதிகம் பேசுகிறார். அதிலும், அந்த படத்தின் ஹீரோ, ராம்சரணின் நடிப்பு, அவருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டதாம். 'காது கேளாத மெக்கானிக் கேரக்டரில், எவ்வளவு இயல்பாக நடித்துள்ளார். எனக்கும், இதுபோன்ற கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது' என்கிறார், ரெஜினா. ராம்சரணை பற்றி, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், வாய் வலிக்காமல் பேசுவார் போலிருக்கிறது.

''இப்போது, தென் மாநில திரைத்துறையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது, வரவேற்கத் தக்கது. இந்திய அளவில் திரைப்படத் துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், தென் மாநில படங்களில் தான், அதிக அளவில் மாற்றம் நிகழ்ந்துள்ளது,'' என்கிறார், ரெஜினா.