A+ A-

மெல்லிடை அழகி' சிம்ரன் பிறந்தநாள் ஸ்பெஷல்..!

80, 90-களில் பிறந்தவர்களின் கனவு தேவதை சிம்ரன். கனவு தேவதையாக வலம் வந்த சிம்ரன் இப்போது அம்மா, அண்ணி வேடங்களுக்கு நகர்ந்துவிட்டாலும் ரசிகர்களின் நினைவுக் கோட்டையில் தேவதையாக வாழ்கிறார். 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் ருக்குவாக, 'உன்னைக்கொடு என்னைத் தருவேன்' இந்துவாக, 'கண்ணெதிரே தோன்றினாள்' ப்ரியாவாக ரசிகர்களுக்கு அறிமுகமான சிம்ரன், திரை தாண்டி நினைவில் நிற்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கண்களாலும், உடல் மொழியாலும், உணர்வுகளாலும் நடித்து ரசிகர்களை ஈர்த்த சிம்ரனுக்கு இன்று பிறந்தநாள்.