A+ A-

மெர்சலை தொடந்து அட்லி இயக்கும் அடுத்த படம்.! ஹீரோ யார்.?

அட்லீ கடைசியாக விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா என பல சர்ச்சைகளுக்கு நடுவே நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி படம் வெளியானது. ஆனால் விஜய் மீண்டும் தான் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னன் என்பதை நிரூபித்து காட்டினார். 

ஆனால் படத்திற்கு அட்லீயால் நஷ்டம். படத்தை பட்ஜெட்டை தாண்டி கொண்டு போய்விட்டார் என சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் தயாரிப்பு நிர்வாகம் படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சியாக இருந்தது என கூறினார்கள். தற்போது அட்லீயின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

 அவர் இனி தெலுங்கு படத்தை தான் இயக்கப்போகிறாராம். மேலும் முன்னணி நடிகரை வைத்து படம் எடுக்க பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது. சில நாட்கள் காத்திருங்கள் சொல்கிறேன் என கூறியுள்ளார்.