A+ A-

"கரு - தியா" ஆனது...!

பிரேமம் படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி, தமிழில் நடித்துள்ள முதல் படம் கரு. விஜய் இயக்கி உள்ள இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாக சவுரியா ஹீரோவாக நடித்திருக்கிறார். முக்கியமான ஒரு ரோலில் பேபி வெரோனிகா நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படம், ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாவதாக படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல படத்தின் தலைப்பான கரு என்பது தியா என மாற்றப்பட்டு இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.