A+ A-

காதலருக்கு குட்பை சொல்லும் ஸ்ருதிஹாசன்!!

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தனது காதலருக்கு குட்பை சொல்லியது கொடுமை என டுவீட் தட்டி இருப்பது வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல்ஹாசன். இவருக்கும் இரண்டாவது மனைவி சரிகாவிற்கும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் ஸ்ருதிஹாசன், இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஆகிய இருவரும் திரை உலகில் முக்கிய இடத்தில் உள்ளனர். தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சலை காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகிறது. இவா்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படமும் பரவி வருகிறது. ஸ்ருதிஹாசன் காதலிப்பதாக வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் காதலரை பார்க்க ஸ்ருதி லண்டன் செல்வதும், மைக்கேல் இந்தியா வருவதும் தொடர் கதையாகி இருக்கிறது.

கண்ணதாசனின் பேரன் திருமணத்தில் ஸ்ருதி பட்டுப்புடவையிலும், மைக்கேல் கார்சல் வெள்ளை, வேட்டி சட்டையில் தமிழ் பாரம்பரியப்படி தம்பதி சமயதராக கலந்து கொண்டது அனைவரது புருவத்தை உயர்த்தியது. அதிலும், கமலுடன் ஒன்றாக இருவரும் சாதாரணமாக அமர்ந்து பேசிய புகைப்படமும் வைரல் ஆகியது.

சமீபத்தில், மைக்கேலின் பிறந்தநாளில் ஸ்ருதி காதலரை கட்டிபிடித்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தது வேறு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது.

இந்நிலையில் சமீபத்தில் மும்பை வந்த மைக்கேல் ஸ்ருதிஹாசனுடன் தங்கியுள்ளார். அதன் பின்னர் அவர் மீண்டும் லண்டன் சென்றுவிட்டார். அதுகுறித்து, டுவிட்டரில் பதிவிட்ட மைக்கேல்“ஒவ்வொரு முறையும் இங்கிருந்து புறப்படும் போதும் நான் மிக சோகமாகிவிடுகிறேன்” என டுவீட் தட்டினார்.

கிளம்பியவருக்கே இந்த பிளிங்னா? அப்போ ஸ்ருதி, “நம்முடன் இருக்க வேண்டும் என நினைக்கும் ஒருவரை விமானத்தில் அனுப்பிவிட்டு குட் பை சொல்வது கொடுமையானது” என பதிவிட்டுள்ளார். எப்பா முத இந்த ஜோடிக்கு திருமணம் செஞ்சு வையுங்கப்பா. ரொமான்ஸுலயும் ரொமான்ஸ் ஓவரா இருக்கே!