A+ A-

நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா? வைரலாகும் தகவல்

நடிகை சமந்தா கடந்த வருடம் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இருவரின் திருமணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பின் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

பின் சமந்தாவும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஷாலுடன் இரும்புதிரை, கீர்த்தி சுரேஷ் உடன் மகாநதி என படங்கள் பல ரெடியாகி வருகிறது.

இதற்கிடையில் இருவரும் அமெரிக்காவில் சுற்றுலா கூட சென்று வந்தார்கள். அண்மையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக குடும்பத்துடன் இல்லை என தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் சமந்தாவும், சைதன்யாவும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா அம்மாவாகிவிட்டால் படத்தில் நடிக்க மாட்டாராம்.

தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை அனுபவித்து மகிழ்ச்சியடைய இருக்கிறாராம்.