A+ A-

உண்ணாவிரதத்தில் நம்பிக்கை இல்லை..!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் பல அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆளும் அதிமுக., சார்பில் இன்று(ஏப்.,3) உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்நிலையில் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயிலில் பயணம் செய்தார் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது...

மக்களுடன் பயணிக்கவே ரயிலில் சென்றேன். உண்ணாவிரதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. பிரச்னைகளை மட்டும் பேசிக்கொண்டு இருக்காமல் தீர்வுகளை நோக்கி நகர வேண்டும் என்றார். மேலும் காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற யோசனை இருக்கிறது. ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க கூடாது என்பது என் எண்ணம். இந்த விசயத்தில் ஒத்துழையாமை இயக்கம் வரை போனாலும் தப்பில்லை என்று கூறியுள்ளார்.