A+ A-

வீதியில் ஆடைகளைக் களைந்து ஆர்ப்பாட்டம் செய்த - ஸ்ரீ ரெட்டி

தெலுங்குத் திரையுலகத்தில் சமீப காலமாக மிகவும் பரபரப்பாக அடிபட்டு வரும் பெயர் ஸ்ரீ ரெட்டி. தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை அம்பலப்படுத்தப் போகிறேன் என விதவிதமான போஸ்களுடன் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இன்று திடீரென பிலிம் நகர் பகுதிக்குச் சென்று அவர் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்ட ஆரம்பித்தார். 80 சதவீதம் களைந்த நிலையில் அவர் இருந்த போது காவல் துறையினர் வந்து அவரது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தனக்கு தெலுங்குத் திரையுலகில் வாய்ப்பில்லாமல் தவித்து வருவதாகவும், தெலுங்கு நடிகையான எனக்கு பலரும் வாய்ப்பே கொடுப்பதில்லை எனவும் புகார் தெரிவித்தார். அவருக்கு தெலுங்கு நடிகர் சங்கத்திலும் உறுப்பினர் அட்டை வழங்க மறுக்கிறார்கள் என்றும், உறுப்பினர் அட்டை வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறினார்.