A+ A-

சமந்தாவின் புதிய அவதாரம்..!

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை படமான மகாநதி-யில் நிருபர் வேடத்தில் நடித்துள்ளார் சமந்தா. இவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் சமந்தா, மதுரவாணி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இதுகுறித்து சமந்தா தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... இந்தப்படத்தில் நானும் நடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மகாநதியில் மதுரவாணியை உங்களுக்கு பிடிக்கும் என பதிவிட்டுள்ளார்.

1955-ம் ஆண்டு கன்யாசுல்கம் என்று ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார் சாவித்ரி. அந்த படத்தில் அவரது கேரக்டர் பெயர் மதுரவாணி. தற்போது அந்த பெயரில் தான் சமந்தா நடித்திருக்கிறார்.