A+ A-

ரசிகர்களின் மனம் கவர்ந்த டாப் சீரியல் ஹீரோக்கள்.!

தமிழ் சினிமா ஹீரோக்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர் நாயகர்களுக்கும் பலமான ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதை தொடர்ந்து, சென்னை டைம்ஸ் கடந்த வருடம் டிவியில் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 ஹீரோக்கள் யார் என்ற தேடலை நடத்தியது. அதன் லிஸ்ட் தான் இந்த வார இணையத்தின் வைரல் டாப்பிக்.

10வது இடம் கார்த்திக் என்னும் சஞ்சீவிற்கு தான். ரியாலிட்டி ஷோக்களில் எண்ட்ரி கொடுத்தவருக்கு குளிர் 100 டிகிரி படம் மூலம் நாயகனாகும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து, சில வருடம் இடைவேளை விட்டார். தற்போது விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமாக இருக்கிறார். ரசிகைகளின் ஹாட் நாயகன் இவர் தான்.

ரியோ ராஜிற்கு 9 வது இடம். டிவியில் தொகுப்பாளராக அறிமுகமானவர். ஆங்கரிங்கே அவருக்கு அதிக ரசிகர்கள் உருவாகினர். இதை தொடர்ந்து, விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் நாயகனாக அறிமுகமாகினார். ஆனால், அதை விட விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளில் அவருக்கு தொகுப்பாளராக இடம் கிடைத்தது தான் மேலும் புகழை அதிகரித்தது. தற்போது, சூப்பர் ஹோஸ்ட்களில் பட்டியலில் முதன்மை இடம் பிடித்திருக்கிறார் ரியோ.

8 வது இடத்தில் இருப்பது நடிகரும், தொகுப்பாளருமான விக்னேஷ் கார்த்திக். பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தவர் தற்போது விஜய் டிவியின் பகல் நிலவு தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில், ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.


7வது இடத்தில் மலையாள அழகன் ராகுல் ரவி. நந்தினி தொடர் மூலம் தமிழில் அறிமுகமானவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள். அத்தொடரில் நடித்து வரும் மாளவிகாவை காதலிப்பதாக சொல்லி வந்தாலும், இவர் இதுவரை யாருடனும் கமிடெட் இல்லை என்பதே பலருக்கு ஸ்வீட் ஷாக் தான்.6வது இடம் அசாருக்கு தான். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் இந்த சீசனில் வெற்றியாளராக மகுடம் சூடினார். தொடர்ந்து, கோலிவுட்டில் நாயகன் அவதாரமும் எடுத்திருக்கும் அசார். ஸ்பாட் டைம் காமெடிகளுக்கு பெயர் போனவர்.ரக்‌ஷன் 5வது இடத்தில் இருக்கிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கிறார். இவரின் பிரபலம் பல வாய்ப்புகளை இவருக்கு அள்ளி தருகிறது. தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தில் நடித்து வருகிறார்.

மிர்ச்சி விஜய்: 4வது இடத்தில் இருக்கும் விஜய் பிரபல ரேடியோ நிகழ்ச்சியின் தொகுப்பாளர். சமூக பிரச்சனைகளில் பல வீடியோக்களை வெளியிட்டு வைரல் லிஸ்டில் இருப்பவர். பாடலாசிரியராகவும், பாடகராகவும் சில படங்களில் பணியாற்றி இருக்கிறார். பேச்சிலே ரசிகைகளை கவர்வதில் கெட்டிக்காரர்.அமித் பார்கவ்: கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் நாயகனான இவருக்கு தான் ரசிகைகள் மனதில் 3வது இடம். தற்போது விஜய் டிவியின் ஒரு சீரியலில் பிஸியாக இருக்கும் அமித் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். உயரமாக இருப்பதே இவரின் ப்ளஸாக கருதப்படுகிறது.

கதிரவன்: தொகுப்பாளராக இருக்கும் கதிர் தான் பெண்களின் ஹாட் நாயகனில் 2வது இடம் பிடித்து இருக்கிறார். சன் மியூசிக் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர்களில் முதன்மையானவர். அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு பெண்களை கவர்ந்து விட்டார் இந்த கில்லாடி.அப்போ யாருக்கு அந்த முதலிடம்… பழசு தான் ஆனா இப்போ புதுசு


பிரஜின்: பெண்களை மனதை கவர்ந்த நாயகனுக்கான போட்டியில் முதலிடம் இவருக்கு தான். தொகுப்பாளராக திரை வாழ்வை தொடங்கிய போதே இவருக்கு ரசிகைகள் ஏராளம். என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு என்ற பாடலே இன்னும் வைரலாக இருக்க காரணம் இவர் தான். காதலிக்க நேரமில்லை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து எல்லா பெண்களை கட்டிப்போட்டவர். பல வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சீரியல் பக்கம் எண்ட்ரி கொடுத்து இருக்கிறார். மாடர்ன் லுக்கில் கலக்கியவருக்கு இந்த முறை கிராமத்து இளைஞன் வேடம். பல பெண்கள் டிவியில் ஐக்கியமாகி இருப்பது பிரஜினுக்கு தான் என பட்சி சொல்லுதாம்.