A+ A-

ரஜினிக்கு பலம் சேர்க்கும் ராகவா!


ரஜினி துவங்கப் போகும் புது கட்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் இணைவதோடு, அவருக்கு கட்சியில் மிக முக்கியப் பொறுப்பும் அளிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

அவரைப் போலவே ரஜினியை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கும் நடிகர் - நடிகையரை ரஜினி கட்சியில் இணைக்க, லாகவா லாரன்ஸ் பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அதேபோல, ரஜினி மீது அபிமானத்தோடு இருந்து, நேரடியாக அரசியலில் களம் இறங்க வேண்டாம் என நினைக்கும் நடிகர்-நடிகையரை, ரஜினிக்கு ஆதரவாக தேர்தல் நேரத்தில் குரல் கொடுக்க வைக்கவும் சிலரிடம் பேசி வருகிறார் ராகவா லாரன்ஸ்.