A+ A-

ஹாலிவுட் படங்களில் ராதிகா ஆப்தே.!


கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே அதன்பிறகு தமிழில் புதிய படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இந்தி, ஆங்கிலத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, என்னைப் பொறுத்தவரை ஒரே மொழிப்படங்களில் கட்டுப்படுத்த விரும்பவில்லை. பல மொழிகளிலும் பரவலாக நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த வகையில், தற்போது ஹிந்தி படங்கள் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் இரண்டு படங்களில் நடிக்கிறேன்.

வழக்கமான கதாநாயகியாக இல்லாமல், துணிச்சலான பெண்ணாக, சுவராஸ்யமான கேரக்டர்களில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளேன். தற்போது ஹாலிவுட்டில் நான் நடிக்கும் இரண்டு படங்களிலுமே வித்தியாசமான சுவராஸ்யமான வேடங்களாக கிடைத்துள்ளது.

இப்படி கூறும் ராதிகா ஆப்தே, சினிமாவை மட்டுமே சார்ந்திருக்காமல், மாடலிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஸ்கோர் பண்ணவும் ஆசைப்படுகிறாராம்.