A+ A-

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஏ.ஆர்.ரகுமானுடன் சந்திப்பு.!


நடிகை நயன்தாராவும், அவரது காதலர் விக்னேஷ் சிவனும் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த இசை விழாவிலும் கலந்து கொண்டார்கள். இதே நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டார். அப்போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்து பேசினர்.

நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கும் படத்திற்கு ரகுமானை இசை அமைக்க கேட்டுக் கொண்டனர். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விக்னேஷ் சிவன் ஹீரோவாகவும், நயன்தாரா அவரது ஜோடியாகவும் நடிக்க இருப்பதாக ஏற்கெனவெ செய்திகள் வெளியாகி உள்ளது. அதனை இருவரும் மறுக்கவில்லை.

இந்த நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்து பேசியிருப்பது அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.