A+ A-

ராஜேஷ் - சிவகார்த்திகேயன் படம் ஆரம்பம்..!


பொன்ராமின் சீமராசா படத்தை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், அடுத்தப்படியாக இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கும் படத்திலும், ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார். ரவிக்குமார் படம் சயின்ஸ் பிக்சன் கதையிலும், ராஜேஷ்.எம் படம் காமெடியாகவும் உருவாகிறது.

இரண்டு படங்களில் ரவிக்குமார் படம் முதலில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜேஷ் பட வேலைகள் துவங்கி உள்ளன. இப்படத்தின் பூஜை இன்று நடந்தது. படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். காமெடியனாக சதீஷ் நடிக்கிறார்.

வேலைக்காரன் படத்திற்கு பிறகு நயன்தாரா மீண்டும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பார் என தெரிகிறது.