A+ A-

தமிழகத்தில் மகேஷ்பாபு படம் செய்த சாதனை

மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த சில படங்கள் தமிழில் டப்பாகி வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த ஸ்பைடர் படம் நேரடியாக தமிழிலேயே வெளியானது. ஆனால் அந்த படம் மகேஷ்பாபுவுக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது.

இந்த நிலையில், தற்போது கொரட்டல சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த பரத் அனே நேனு என்ற படம் கடந்த மாதம் 20-ந்தேதி வெளியானது. அந்த படம் இதற்கு முன்பு மகேஷ்பாபு நடித்த படங்கள் தமிழகத்தில் வசூலித்ததை விடவும் அதிகப்படியாக வசூலித்துள்ளது.

அதாவது, இந்த படம் இதுவரை தமிழ்நாட்டில் 3.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. சென்னையில் மட்டும் 1.4 கோடி வசூல் செய்துள்ளது.