A+ A-

மீண்டும் பிகினியில் அலறவிட்ட எமி ஜாக்சன்.!

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக '2.0' படத்தில் நடிக்கும் எம் ஜாக்சன் அவருடைய சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமரான, ஆபாசமான படங்களை வெளியிடுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். தற்போது கருப்பு நிறு பிகினி உடையணிந்து போஸ் கொடுத்து அதை தனது இன்ஸ்டிராகிராமில் பதிவிட்டிருக்கிறார். 



நமக்கு ஆபாசமாகத் தெரிவது அவருக்கு ஒரு 'மாடல்' ஆகத் தெரியலாம். இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், இந்தியக் கலாச்சாரம் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தாலும், இந்தியப் படங்களில் நடிப்பவராக இருந்தாலும் எமி ஜாக்சன் அப்படிப்பட்ட புகைப்படங்களைப் பதிவிடுவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

கூகுளில் எமி ஜாக்சன் என்று தேடினால் கூட அவர் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் வருவதை விட இது மாதிரியான கிளாமரான படங்கள் அதிகம் வருகிறது. தமிழில் '2.0' படத்தில் நடித்து முடித்துள்ள எமி ஜாக்சன் கன்னடத்தில் 'வில்லன்' என்ற படத்தில் சுதீப்புடன் நடித்து வருகிறார். வேறு எந்தப் படமும் அவர் கைவசமில்லை.