A+ A-

இனிமேல், அரவிந்த் சாமிக்கு நிம்மதி தான்..!


சமீபத்தில் நடந்த சினிமா ஸ்டிரைக்கால், ரொம்பவே மனம் நொந்து போய், கருத்து தெரிவித்தவர், அரவிந்த் சாமி தான். 'சம்பந்தப்பட்ட பொறுப்பில் உள்ளவர்கள், பேச்சு நடத்தி, பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணுங்கள்' என, அடிக்கடி, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தார்.

 ஒரு வழியாக, ஸ்டிரைக் முடிந்த பின், 'பிரச்னைக்கு தீர்வு கண்ட அனைவருக்கும் நன்றி' என, பதிவிட்டார். ஆனாலும், அவரது மனக்குறை தீரவில்லை. போதிய தியேட்டர் கிடைக்காததால், அவரும், அமலா பாலும் நடித்த, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை குறிப்பிட்ட நாளில் திரையிட முடியாமல் போய் விட்டது. 

அதற்கும், கவலை தெரிவித்திருந்தார், அரவிந்த் சாமி. ஒரு வழியாக பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம், அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. 'இனிமேல், அரவிந்த் சாமிக்கு நிம்மதி தான்' என, ஜாலியாக கிண்டலடிக்கின்றனர், ரசிகர்கள்.