A+ A-

பிஸியான படப்பிடிப்புக்கு இடையிலும் ஓவியாவிற்கு நேரம் ஒதுக்கும் சிம்பு

செக்க சிவந்த வானம் படத்தின் பிஸிக்கு இடையிலும் ஓவியா படத்தின் இசையமைப்பு பணிகளையும் சிம்பு பரபரப்பாக செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் ஆக்டராக இருப்பவர் சிம்பு. பாடகராக கலக்கியவர் சந்தானத்தால் புது அவதாரம் எடுத்தார். சக்கை போடு போடு ராஜா படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றினார். டி.ஆர் மற்றும் அவரது மனைவி, யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை பாட வைத்து கெத்து காட்டினார். சிம்புவின் இசை என்பதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ரிலீஸுக்கு பிறகு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து, ஓவியா நடிப்பில் உருவாகி வரும் 90எம்.எல் படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இயக்குனர் அனிதா இயக்கும் இப்படத்தை என்விஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். படப்பிடிப்புகளில் சமத்து பிள்ளையாக கலந்து கொண்டு இருக்கிறார். இந்த பரபரப்புக்கு இடையிலும் ஓவியாவிற்கு நேரம் ஒதுக்குவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. அட நீங்க நினைக்கிற மாதிரிலாம் இல்ல பாஸே!

இசையமைப்பாளராக தனது இரண்டாவது படத்திற்கு இசையமைப்பை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை காதல் கசக்குதே உள்ளிட்ட 4 பாடல்களுக்கு இசையமைப்பு பணியை செய்து முடித்து விட்டார். விரைவில், இப்பாடல்களுக்கு பிரபல பாடகர்கள் குரல் கொடுக்க இருக்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மரண மட்டை பாடலை புத்தாண்டில் வெளியிட்டு வைரல் ஆகினார் சிம்பு.

இப்பாடலை பாடியவர் ஓவியா தான் என்பதால் கூடுதலான வரவேற்பை பெற்றது. ஏற்கனவே, கோலிவுட்டில் ஓவியாவும் சிம்புவும் காதலிப்பதாக ஒரு தகவல்கள் றெக்கை கட்டி பறந்து வருகிறது. இருதரப்பில் இருந்தும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு விட்டாலும், ரசிகர்கள் இவர்களின் கூட்டணியை தான் எதிர்பார்க்கிறார்கள். இதனால், 90எம்.எல் படத்திற்கு தற்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுவது குறிப்பிடத்தக்கது.