A+ A-

விஜய் சேதுபதிக்கு சாப்பாடு ஊட்டிய சிம்பு..!

விஜய் சேதுபதியை பொறுத்தவரை எந்தவித ஈகோவும் பார்க்காத ஒரு நடிகர். படப்பிடிப்பில் அனைவரிடமும் சகஜமாக நண்பராக பழகுவார். சிம்புவுடன் இப்போதுதான் மணிரத்னம் இயக்கி வரும் செக்கச்சிவந்த வானம் படத்தில் இணைந்துள்ளார். அதற்குள் அவருடன் நல்ல நண்பராகிவிட்டார் விஜய் சேதுபதி.

இருவரும் படப்பிடிப்பில் ஓய்வில் இருக்கும்போது ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்களாம். அதோடு, ஒருநாள் சிம்பு சாப்பிடும்போது, அருகில் அமர்ந்திருந்த விஜய் சேதுபதிக்கு தனது கையால் சாப்பாடு ஊட்டி விட்டிருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.