A+ A-

கவுதம் கார்த்திக் போட்ட நிபந்தனை.!


'ஹரஹர மகாதேவகி' என்ற அடல்ட் காமெடிப் படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயகுமார் தனது இரண்டாவது படமாக இயக்கியுள்ள படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'.

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவின் 'ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ்' பட நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாகவும், வைபைவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி ஆகிய கதாநாயகிகளும் நடித்துள்ளனர். பால சரவணன், கருணாகாரன், மொட்டை ராஜேந்திரன் ஆகிய காமெடியன்களும் நடித்துள்ள 'இருட்டு அறையில் முரட்டு குத்து' கடந்த வாரம் அதாவது மே-4 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது.

இந்தப் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தாலும் அப்படத்தின் நாயகன் கவுதம் கார்த்திக்குக்கு கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுத்துவிட்டது.

இப்படியொரு எதிர்மறையான விமர்சனம் வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த கவுதம் கார்த்திக், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமான டயலாக் பேச மாட்டேன் என்று நிபந்தனை விதித்து அதன்படியே நடித்திருக்கிறார்.

ஆனாலும் கவுதம் கார்த்திக்கை பலரும் கழுவி ஊற்றிக்கொண்டு தான் இருக்கின்றனர்.