A+ A-

மன்சூர் அலிகானின் 3வது மனைவி கூறிய அதிர்ச்சி புகார்

விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன்பின்னர் வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் நடிகர் மன்சூர் அலிகான். இவருடைய பெயர் அடிக்கடி ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது இவரது 3வது மனைவி இவர் மீது திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்

மன்சூர் அலிகானின் 2வது மனைவி ஹமீதா என்பவர் தன்னை இரும்புக்கம்பியால் தாக்கியதாகவும், இந்த தாக்குதல் நடந்தபோது மன்சூர் அலிகான் அருகே இருந்தும் தடுக்கவில்லை என்றும் அவருடைய 3வது மனைவி வஹிதா; நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இரும்புக்கம்பியால் தாக்கப்பட்ட வஹிதா படுகாயம் அடைந்துள்ளதால் அவர் தற்போது சென்னை கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.