A+ A-

சின்மயி ஏன் பொய் சொல்லணும்?, எனக்கு கூட 5 பேர் பாலியல் தொல்லை : வரலட்சுமி சரத்குமார்

சின்மயி சொல்லும் பாலியல் புகாரில் உண்மை இருப்பதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் #ME TOO இயக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் தெரிவித்தார். இதை அவர் விளம்பரம் தேட கூறுவதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் சின்மயிக்கு திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

சின்மயி நடந்த சம்பவத்தை விவரமாக தெரிவித்துள்ளார். அவர் சொல்வதில் உண்மை உள்ளது என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். #ME TOO இயக்கத்திற்கு ஆதரவு அளித்து தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார் வரலட்சுமி. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தான் சிறுமியாக இருந்தபோது கிட்டத்தட்ட 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். அவர் நடத்தும் உன்னை அறிந்தால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ப்ரொமோ வீடியோவில் இதை தெரிவித்துள்ளார்.