A+ A-

சகிக்க முடியாத பாலியல் தொல்லை.. வாந்தி எடுத்த சுனிதா சாரதி! கொடுமையோ கொடுமை!

நெருங்கிய உறவினரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக பாடகி சுனிதா சாரதி தெரிவித்துள்ளார். #Me Too என்ற ஹேஷ்டேக்கில் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பாடகி சுனிதா சாரதியும் தன் எண்ணக் குமுறலைக் கொட்டித் தீர்த்துள்ளார். சின்மயி சொன்னதைக் கேட்டு நொறுங்கிப்போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்

எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கும்போது, அவருடைய அம்மாவின் உறவினர் ஒருவர் என்னை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று தவறான முறையில் தொடுவான். அது எனக்கு எரிச்சலூட்டியது. அவனுக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இன்னும் எத்தனை பெண்குழந்தைகளிடம் அப்படி நடந்தானோ தெரியவில்லை. இப்போதும் அவனுக்கு முன்னால் செல்ல விருப்பமில்லை. ஆனால் எல்லாரும் என்னை திமிரு பிடித்தவள் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவனை மன்னிக்க எனக்கு மனமில்லை. 

சில வருடங்களுக்குப் பிறகு மற்றுமொரு சம்பவம் நடந்தது. என் அம்மாவுடன் பணியாற்றும் நண்பன் ஒருவன் வீட்டிற்கு வருவான். அவன் வரும்போதெல்லாம் என்னை சுட்டி என்று சொல்லி அவனுடைய மடியில் உட்கார வைத்துக்கொள்வான். முத்தமிட முயற்சி செய்வான், அவனை நான் வெறுத்தேன். 

சில வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் மதியம் நான் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது வீட்டிற்க்கு வந்த அவன் சட்டென என்னை இறுகப் பிடித்து முத்தமிட்டுவிட்டான். அவன் பிடியிலிருந்து தப்பித்து பாத்ரூமுக்குள் ஓடிப்போய் ஒரு பாட்டில் டெட்டாலை என் வாயில் ஊற்றிவிட்டேன். செய்வதறியாது ஊற்றியதால், குமட்டி வாந்தி வந்துவிட்டது. சிறிது நேரம் அப்சட்டாகி அங்கேயே அமர்ந்திருந்தேன். பிறகு அவன் குடும்பத்தினுடனான உறவை துண்டித்துவிட்டேன்.

பாலியல் துன்புறுத்தல்கள் எப்படிக் கொல்லும் என்பதை அதை அனுபவித்தவர்களால்தான் உணர முடியும். நீங்கள் பாதிக்கப்படவில்லை என்றால் அதை உங்களால் உணர முடியாது. சில வருடங்களாக மாடியிலிருந்து குதித்துவிடலாமா என யோசித்திருக்கிறேன், வீட்டை விட்டு ஓடியிருக்கிறேன், ஆனால் நீண்ட தூரம் போகவில்லை. என்னுடைய விலங்குகளால்தான் நான் காப்பாற்றப்பட்டேன். கடவுள் என்னைக் காப்பதற்காக பிராணிகளை அனுப்பியிருக்கிறார். 

இரண்டு சம்பவங்களைத் தான் பகிர்ந்துள்ளேன், ஆனால் இன்னும் பல பிசாசுகள் என் குடும்பத்திலும், என்னுடைய துறையிலும் உள்ளன. அதில் ஒரு டெவில் நான் இணங்க மறுப்பதால் என்னை பரிந்துரைகப்படாதவாறு பார்த்துக்கொள்ளும். மற்றொரு பிசாசு செல்வாக்கு மிக்க இசைக்கலைஞர். மிக பக்திகரமானது. அது எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும். 

கத்தியால் குத்துவதற்கு காத்திருந்தாலும் பாலியல் சீண்டலுக்கு ஆளானவர்கள் எப்போதும் உண்மையைப் பேசுங்கள். சின்மயி.. நாம் இருவரும் முன்புபோல் நண்பர்கள் இல்லை. உங்களுடைய பிரச்சனையை படித்தபோது நான் நொறுங்கிப்போனேன். பெண்ணுக்கு பெண் ஆதரவு தரவேண்டும். வெறுப்பு, பொறாமை, தவறான புரிதலால் போன்ற விஷயங்களால் ஒன்றிணையாமல் இருக்க முடியாது. நாங்கள் எவ்வளவு பிரச்சனைகளை தினந்தோறும் சந்திக்கிறோம் என உங்களுக்கு தெரியுமா? எங்களுக்கு ஆதரவாக இருங்கள்" என ஆண்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.