A+ A-

எனக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை: மனம் திறந்த நடிகை அமலாபால்

எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததை எப்படி வெளியில் சொன்னேனே அதே போல எல்லா பெண்களும் தைரியமாக சொல்ல வேண்டும் என நடிகை அமலாபால் கூறியுள்ளார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #Metoo மூலம் வெளியில் தெரிவித்து வருகிறார்கள்.

உலகம் முழுவதும் இது நடந்து வரும் நிலையில் பாடகி சின்மயி கொடுத்த புகாரையடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

இது குறித்து பேசிய பிரபல நடிகை அமலாபால், சமூகவலைதளங்கள் மூலம் நிகழும் #Metoo முக்கியமானது. இதன் மூலம் பெண்கள் தங்கள் பிரச்சனைகளை சொல்ல முடிகிறது.

எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது அதனை நான் வெளியில் சொன்னது போல எல்லா பெண்களும் சொல்ல முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.

முன்னதாக நடனப்பள்ளி உரிமையாளர் அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அமலாபால் கடந்த ஜனவரி மாதம் பொலிசில் புகார் அளித்தார். இதையடுத்து அழகேசனை பொலிசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.