A+ A-

நீ என்ன சின்னப்புள்ளையா? பட்டுப்படாம படாம நடந்துக்கோ! இளம் பாடகியை அழைத்த வைரமுத்து

தமிழ் சினிமா உலகத்தில் சின்மயி அளித்த புகாரையடுத்து பல திரை பிரபலங்களும் அவர் மீது குறைசொல்லியுள்ளனர்.
மேலும் மற்றொரு பாடகியிடம் அவர் தவறாக நடந்தது பற்றி செய்தி வெளிவந்துள்ளது. பாடகி ஆகும் கனவோடு அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த பெண்ணை வைரமுத்து ஒரு கடை விளம்பரத்திற்காக சந்தித்தாராம். அப்போது தன் ஆபிசுக்கு வரும்படி அழைத்துள்ளார். அதை ஏற்று அந்த பெண் ஆபிஸ் சென்று பாடிகாட்டிவிட்டு வந்துவிட்டார்.

அதன்பின் அந்த பெண்ணின் தொலைபேசிக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு நான் தேடிய அறிவுப்பூர்வமான பெண் நீதான், உன் கண்கள் என்ன கூர்வாளா என்றெல்லாம் கவிதை மொழியில் தொல்லை செய்துள்ளார் வைரமுத்து.
நான் ஒரு விருது வாங்க மலேசியா செல்கிறேன், என்னுடன் வருகிறாயா என ஒரு நாள் கேட்டாராம் வைரமுத்து.

" பாடுவதற்கா இல்லை ஆங்கரிங் செய்யவா?" என பெண் கேட்டாராம். அதற்கு அவர் "இரண்டும் இல்லை. நீ என்ன சின்ன பெண்ணா? சினிமா துறையில் இது சாதாரணம். பட்டும் படாம நடந்துக்கணும்" என கூறியுள்ளார்.
அந்த பெண் முடியாது என கூறியதும், "உன் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிடுவேன்" என மிரட்டிய வைரமுத்து போனை கட் செய்துவிட்டாராம்.

என்று  அந்த பெண் 20 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் பற்றி தற்போது வெளியுலகத்திற்க்கு கூறியுள்ளார்.