A+ A-

பிரஸ் மீட்டில் அடிவாங்கிய சின்மயி வெளியேற்றம்

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிவரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஏன் இதுவரை அவர் சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடவில்லை என்கிற கேள்வி இருக்கும் நிலையில் இன்று சின்மயி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.

நான் தற்போது அங்கு சென்று வந்த பாஸ்போர்ட்டை தேடிக்கொண்டிருக்கிறேன். அது ஒரு முக்கிய ஆவணம். அது கிடைத்ததும் வழக்கு தொடர்வேன் என சின்மயி பதில் அளித்துள்ளார்.

மேலும் இந்த சர்ச்சை பற்றி செய்தியாளர்களுக்கும் வந்திருந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது எழுந்து நின்ற சின்மயி கையெடுத்து கும்பிட்டு "கெஞ்சி கேட்கிறேன்.. நிறுத்திக்கோங்க.. இவ்ளோ நாளுக்கு அப்புறம் இந்த புகார் சொல்லியிருக்கோம்.

யாரோ ஒருவரை அசிங்கப்படுத்த நாங்க வரல.. எங்களுக்கு கதை இருக்கு.. நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கோம், ஆண்களா நீங்க எங்களுக்கு ஆதரவு தருவீங்கன்னு எதிர்பார்த்தோம்" என சின்மயி ஆண் செய்தியாளர்களை பார்த்து கேட்டுள்ளார்.