A+ A-

விஜய் மீது வழக்கு! சர்க்கார் இயக்குனரின் அனைத்து படங்களுக்கும் தடை

விஜய் படங்களுக்கு சர்ச்சைகள் எந்த ரூபத்திலாவது வந்து விடுகிறது. கடந்த வருடம் மெர்சல் படம் கடும் சர்ச்சைகளுக்கு நடுவே தான் வெளியானது.

இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்க்கார் படமும் கூட சர்ச்சையான நிலையில் தான் இருக்கிறது. வருண் ராஜேந்திரன் என்பவர் கதை என்னுடையது என வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் குறும்பட இயக்குனர் அன்பு.ராஜசேகர் என்பவர் என்னுடைய தாகபூமி படத்தை வைத்து தான் கத்தி படத்தை இயக்கியுள்ளார் முருகதாஸ்.

இதற்காக நீதி கேட்டு 4 வருடங்களாக போராடி வருகிறேன். இந்நிலையில் அவர் சர்க்கார் மற்றும் முருகதாஸ் இயக்கும் அனைத்து படங்களுக்கும் தடை கேட்டு வழக்கு தொடர் போவதாக அவர் கூறியுள்ளார்.